No Flash

தமிழ்





செந்தமிழ் 

திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ். 

உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது.  மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும், வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மொழியே செம்மொழி. செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது.

சுமேரிய மொழி, ஆதி எகிப்திய மொழி, ஆதி பாபிலோனிய மொழி, ஹீப்ரூ, சீன மொழி, கிரேக்கம், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், மண்டாயிக், சிரியாக், ஆர்மீனியன், பெர்சியன் ஆகியவற்றை செம்மொழிகளாக உலகம் கண்டிருக்கிறது. 

இன்று தனிச் சிறப்புடன் கூடிய ஒரு மொழியாக திகழும் மலையாளம், அதாவது மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் போல. தமிழிலிலிருந்து நேரடியாக பிரிந்த ஒரு மொழிதான் மலையாளம். 

தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடு இணையே இல்லை என்பது பல்வேறு செம்மொழிகளை ஆய்வு செய்தவர்கள் அளித்துள்ள தீர்ப்பு. செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது. 

தமிழ் எனும் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது. 

பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. 

தனிச் சிறப்புக்கு சங்க இலக்கியங்கள்... தொல்காப்பியம் மட்டுமல்லாமல் தமிழுக்கு மணி மகுடமாக விளங்குபவை சங்க கால இலக்கியங்கள். அவற்றில் பல நம்மிடையே இன்று இல்லை. காலம் அவற்றை அழித்து விட்டது. நமது கைக்குக் கிடைத்துள்ள சில நூல்கள் ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழின் தனிச் சிறப்பை வெளிக்காட்ட உதவுகிறது. 

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அக நானூறு, புற நானூறு, நற்றினை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவை அவற்றில் சில. இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் மிக செழுமையான நிலையில் இருந்தது. சங்க கால இலக்கியம், தமிழின் பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை. 

அதேபோல தமிழின் தலை சிறந்த அடையாளங்களில் ஒன்று திருக்குறள். தமிழ் என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட வராமல், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருந்தும் வகையிலான இந்த அரும் படைப்பு, தமிழுக்கு மட்டும் சொந்தமானதல்ல, உலகுக்கே பொதுவானது. அதனால்தான் குறளை உலகப் பொது மறையாக போற்றுகிறது இலக்கிய உலகம். 

கி.பி. 3வது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களைக் கண்டது தமிழ். தமிழின் ராமாயணம், மகாபாரதம் என இதைச் சொல்லலாம். அதேபோல கம்ப ராமாயணமும். தமிழின் அபாரமான படைப்புகளில் இதுவும் ஒன்று. 

வால்மீகியின் ராயாணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படைப்பை கம்பர் படைத்திருந்தாலும், அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தனது சுய படைப்பு போல இதை அமைத்திருப்பது மிக மிக வியப்புக்குரியது. அது கம்பரின் திறமையா அல்லது தமிழின் செழுமையா என்பதே ஒரு பட்டிமன்றத் தலைப்புக்குரியது. அதனால்தான் இன்றளவும் கம்ப ராமாயாணம் விவாதப் பொருளாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கொணடிருக்கிறது. 

பரவசப்படுத்தும் பக்தி இலக்கியம் 

பக்தி இலக்கியத்திலும் தமிழுக்கு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக நாயன்மார் இலக்கியம் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நான்கு தலை சிறந்த நாயன்மார்கள் ஆவர். 

அதேபோல 12 ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த சேவை மறக்க முடியாதது. அவர்களில் ஆண்டாளும், குலசேகர ஆழ்வாரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் படைத்த திருப்பாவை தமிழின் தனிச் சிறப்புக்கு அருமையான உதாரணம். தமிழுக்கு அருஞ்சேவை புரிந்தவர்களில் உமறுப் புலவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது.  அதேபோல கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தாக்கமும் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது. 

இப்படி தமிழின் சிறப்புகளையும், அதன் சீரையும், செழுமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட சிறப்புடைய தமிழ், 2004ம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செம்மொழியாக பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கி விட்டது என்பதே உண்மை. 

தமிழின் பிற சிறப்புகள் :- 

★ தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது. 

★ கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

 யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும். 

★ இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள். 

★ தமிழில் கிட்டத்தட்ட 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரி ஆகியவையே அவை. 

★ உலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது தமிழ். 

★ இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கயானா, பிஜி, சூரினாம், டிரினிடாட் டொபாகோ, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களும், தமிழும் கணிசமாக உள்ளனர். 

★ எத்தகைய மொழிக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயல்பும், பாலில் நீர் கலப்பது போல இயைந்து போகும் சிறப்பும் உள்ள மொழி தமிழ். 

★ உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழி  தமிழ்.


செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

                                                                      - மகாகவி பாரதியார் 


தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….

பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்..
வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு!
அங்கோர்வாட் கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :-

மூன்றாம் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் மதுரை நகரம் முறையாக நிர்மாணிக்கப்பட்டது என தமிழ்ச் சங்க வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குதான் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைப் பொறுத்தவரை நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களைக் கொண்டது. பாண்டிய மன்னரால் மீனாட்சிக்கு கோயில் எழுப்பப்பட்டது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இக்கோயிலில் சம அளவில் முக்கியத்துவம் பெற்ற மீனாட்சி அம்மன் சன்னதியும், சுந்தரேசுவரர் சன்னதியும் தனித்தனியே அமைந்துள்ளன. சக்தியின் அம்சமாக அம்மன் குடிகொண்டிருக்கும் முக்கிய இடங்கள் 3 உண்டு. ஒன்று காஞ்சியில் காமாட்சி, மற்றொன்று காசியில் விசாலாட்சி, மூன்றாவதாக மதுரையில் மீனாட்சி என்பர். 
சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். 

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. 7 இசைத் தூண்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன. கிழக்கு கோபுரம் எனப்படும் ராஜகோபுரம் பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. 

கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்குஇரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை, இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்?
மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா?
திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால்கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை, கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.
கடல் நடுவே ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற் கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?
தொல்காப்பியமும்‪ திருக்குறளும்‬:-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கிலமொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?
அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவின் அணுவினை …அணுகவல்லார்க்குஅணுவின் அணுவினை அணுகலுமாமே”-ஆசான் திருமூலர்சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்.
சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே எனதமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியானதமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.
வானியல் அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.
பூம்புகார் உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதர நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
பரத நாட்டியம்:- 

தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. 

விளையாட்டு:- 

ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.

கபடி 
கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. சல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி.[1] இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.


உலகை கட்டி ஆண்ட தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித்தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே. அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமதுவரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்.
 தமிழ் வாழ்க !

No comments:

Post a Comment